காடை கிரேவி
தேவையான பொருட்கள் :
காடை 2
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
மல்லித்தூள் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை 1 கொத்து
அரைக்க 1 :
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
அரைக்க 2 :
தேங்காய் துருவல் – கால் கப்
சோம்பு – அரை டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் – தேவைக்கேற்ப
பட்டை – 1
கிராம்பு – 1
பிரிஞ்சி இலை – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.தேங்காய்த் துருவல் மற்றும் சோம்பினை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.பின் இதனுடன் வெங்காயம், சேர்த்து பொன்னிறமானதும், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் இதனுடன் தூள் வகைகள், காடை துண்டுகள், அரைத்த தேங்காய் விழுதுகள், உப்பு சேர்த்து வதக்கவும்.தேவையான அளவு நீர் விட்டு, மூடி வேக விடவும்.குக்கர் என்றால் 2 விசில் போதுமானது. பாத்திரம் என்றால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சரி பார்க்கவும்.வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான காடை கிரேவி ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதம், சப்பாத்திக்கு மிகவும் சுவையானது.