பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இருக்கும் சில அதிகாரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 96 வயதை கடந்திருக்கிறார். இந்நிலையில், பிறர் யாருக்கும் கிடைக்காத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மகாராணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட சில சலுகைகள் குறித்து பார்ப்போம். அதாவது ஓட்டுநர் உரிமம் இன்றி அவர் வாகனத்தை ஓட்டி செல்லலாம்.
எனவே, நாட்டிலேயே ஓட்டுனர் உரிமமின்றி செல்லக்கூடிய உரிமை இருக்கும் ஒரே நபர் அவர் தான். மகாராணிக்கு, வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடிய உரிமை இல்லை. எனிலும், அந்நாட்டின் அரசாங்கத்தில் முக்கிய நபராக இருக்கிறார்.
அவரால் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியும். மகாராணிக்கு வருமான வரி செலுத்துவதிலும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர் கடவுச்சீட்டின்றி சர்வதேச பயணத்தை மேற்கொள்ள அனுமதி இருக்கிறது. உலகில் சுமார் 35 நாடுகளுடைய நாணயத்தில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் முகம் இடம்பெற்றிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமானது, அவருக்கு போர் மற்றும் சமாதானத்தை அறிவிக்கக்கூடிய உரிமை இருக்கிறது. ஆயுத சண்டைகள் இருக்கும் பகுதிக்கு துருப்புகளையும் அவர் அனுப்பலாம்.