Categories
உலக செய்திகள்

செல்லப்பேரன் மீது அதீத அன்பு கொண்டிருந்த மகாராணி…. சுவாரஸ்ய தொகுப்பு…!!!

அமெரிக்காவிலிருந்து தன் செல்லப் பேரன் ஹாரியின் அழைப்பு வந்த உடனே உற்சாகமாகும் மகாராணியார், சில காலங்களில் மாறிவிட்டதாக அரண்மனை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹாரி, அரச குடும்பத்தை விட்டு பிரிந்து அமெரிக்க நாட்டிற்கு சென்று வாழ தொடங்கிய போதும், தன் பாட்டி மகாராணியாருடன் தொலைபேசியில் பேசுவாராம். தன் செல்லப் பேரன் ஹாரி அழைத்தவுடன் மகாராணியார் உற்சாகமடைவார் என்று அரண்மனை பணியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனினும், சில காலங்கள் அவரின் உணர்வில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மகாராணியார் இரண்டாம் எரிசபெத்தும், இளவரசர் ஹாரியும் மிகவும் நெருக்கமானவர்களாம். தன் பேரன் மீது தான் வைத்திருக்கும் அதிக அன்பு காரணமாகத்தான் அமெரிக்காவை சேர்ந்த விவாகரத்து ஆன பெண்ணை அவர் மணந்து கொள்ள மகாராணியார் சம்மதம் தெரிவித்தார்.

அதன் பிறகு அரச குடும்பத்தில் ஹாரியின் மனைவியால் குழப்பங்கள் ஏற்பட்டு அரண்மனையிலிருந்து வெளியேறியதுடன் நாட்டிலிருந்து வெளியேறினார்கள். அந்த சமயத்திலும் தன் பேரன் பற்றி தவறாக எந்த வார்த்தையும் கூறாமல் இருந்தால் மகாராணியார்.

எனினும் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் அமெரிக்கா சென்ற பிறகு ஒரு தொலைக்காட்சிக்கு கொடுத்த நேர்காணலில் அரச குடும்பத்தினர் மற்றும் தன் தந்தை சார்லஸ் மீது அதிகமாக குற்றம் சாட்டியது, மகாராணியாரை  மாற்றமடைய செய்ததாக கூறப்பட்டிருக்கிறது.

எனினும், அன்பு மிகுந்த பாட்டியாரை பிரிந்தவுடன் ஹாரி கண் கலங்க அழுது கொண்டு நின்ற புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |