என் கணவர் ஒப்புக் கொண்டால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியாமணி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியாமணி. கார்த்தியின் பருத்தி வீரன் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்களுக்கு ஏராளமானோர் லைக்குகளை குவித்து வருகின்றனர். அதில் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்டு கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த பிரியாமணி, “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள். அவர் ஒப்புக்கொண்டால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.