விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாமா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமன் “ஆம்” என்று பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் உடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஏ ஆர் முருகதாஸ் இப்படத்திற்கான இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த தமனாலும் இசை அமைக்க முடியாமல் போய்விட்டது. தற்போது “தளபதி 65″படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார். மேலும் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலர் தமனிடம் விஜயுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமன் “ஆம்” என்று பதில் அளித்துள்ளார். இதனால் விஜயின் அடுத்த படத்திலேயே தமனின் இசையில் காணலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.