Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் கேட்ட கேள்வி…? சோகத்துடன் பதிலளித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம்…!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் வெங்கட் ரங்கநாதனிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சோகமாக பதிலளித்துள்ளார்.

முன்னணி நடிகர் தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் பாண்டியன் இயக்கத்தில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றியை சந்தித்தது. சொல்லப்போனால் தளபதி விஜய் இந்த அளவிற்கு வந்ததற்கு அவரது தந்தையே முழு காரணம் என்று கூறலாம்.

ஏனென்றால் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவரது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாண்டியனே இயக்கியுள்ளார். இந்நிலையில் சந்திரசேகரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான கேப்மாரி திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆகையால் தனது அடுத்த படத்தை பயங்கரமாக எடுக்க வேண்டும் என்று சந்திரசேகர் திட்டமிட்டுள்ளார்.

இதில் நடிப்பதற்காக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் என்பவரை தேர்வு செய்தார். அவரிடமும் இந்த விஷயத்தைப் பட்டு கூறியுள்ளார். இந்நிலையில் வெகு நாட்களாகியும் சந்திரசேகர் இப்படம் குறித்த எந்த தகவலையும் வெங்கட் ரங்கநாதனுக்கு சொல்லவில்லை.

இதனால் வெங்கட்டிடம் ரசிகர்கள் சிலர் நீங்கள் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொன்ன தகவல் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர் விரைவில் நல்லது நடக்கும் என்று சோகமாக கூறியுள்ளார்.

Categories

Tech |