கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கடாது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களில் பணிபுரியும் அறங்காவலர்கள் பெயர்களை வெளியிடக் கூடாது என்று அறநிலையத் துறையால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அறைநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது. இதில் முதல் கேள்வியாக 1. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது?
இரண்டாவது கேள்வியாக 2. பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதனால் என்ன தவறு இருக்கிறது? மூன்றாம் கேள்வியாக, 3. நிர்வாகிகளின் விவரங்களை கோவில் அறிவிப்பு பலகையில் ஏன் வெளியிட கூடாது? இவ்வாறு பல கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தகுந்த பதிலை செப்டம்பர் 17-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று அறநிலைய துறைக்கு உத்தரவிட்டுள்ளது.