தேர்வு வினாத்தாள் வெளியாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசு தேர்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்று தினம் நடந்த பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் மற்றும் நேற்று நடைபெற்ற கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் வினாத்தாள் முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி நேற்றே வெளியானதால் கல்வித்துறை அதிர்ச்சி அடைந்தது.குறிப்பாக சேர் சாட் அப்பில் கல்வி மற்றும் தொழில் நுட்பம் என்று தனியாக ஒரு பகுதி இருக்கின்றது. அதை ஓபன் செய்து பார்த்தல் அதில் தேர்வு வினாத்தாள் உள்ளது அதிர்ச்சியடைய வைக்கின்றது.
இந்நிலையில் இன்று அனைத்து மாவட்ட முதண்மை கலவி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் , 10,11,12 வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றிக்கையில் தெரிவித்துள்ளனர்.