Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை சீக்கிரம் முடிங்க…. பாதியில் நிற்கும் பணி…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

பாதியில் நிற்கும் சாலை பணியை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் கிராமப்புற சாலைகள், பாலங்கள், மதகுகள் அமைப்பது தொடர்பாக 2019ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேம்படி மற்றும் வேட்டங்குடி சாலைகள் மட்டும் தார் சாலைகளாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்றுள்ளது.

அவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் திடீரென அரைகுறையாக நிறுத்தப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் அவ்வழியாகச் சென்று வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.

மேலும் இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு கிடைக்கும் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |