அகிம்சையால் உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டை உருவாக்கிய அனைவருக்கும் ஒரே அளவிலான சுதந்திரத்தை உறுதிபட காந்தியடிகள் இந்திய மக்களைத் திரட்டிப் போராட்டம் தான் வெள்ளையனே வெளியேறு.
1942 ஆகஸ்டு 8 அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்த போது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. ஜெர்மனி சோவியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எதிர்த்தரப்பில் ஜப்பான் இந்தியாவை முற்றுகையிட முன்னேறிக் கொண்டிருந்தது. இந்திய மக்களும் கொந்தளிப்பான உணர்வில் இருந்த காலம் அது. இந்திய தலைவர்களை ஆலோசிக்காமல் இந்திய ராணுவப் படையினரை பிரிட்டிஷ் சேர்த்து கொண்டதாக அதிர்ப்தி நிலவியது. இந்தியாவின் வளத்தின் பெரும்பகுதி யுத்தத்திற்காக கொண்டு செல்லப்பட்டதால் ஏற்பட்ட பஞ்சமும், பொருளாதார நெருக்கடியும் கிளர்ச்சி செய்வதற்கு மக்களை நிர்ப்பந்தித்தது.
சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷாரை எதிர்த்து ஜப்பானிய ராணுவத்தினர்க்கு இந்தியர்களிடம் கோரினார். வெள்ளையனே வெளியேறு போராட்டம் அறிவிக்கப்பட்டு, பாரத காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தான் செய் அல்லது செத்துமடி என்ற புகழ்மிக்க வாசகத்தையும் காந்தி அறிவித்தார். அகிம்சத்தை அழுத்தமாக வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தை பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் மிகவும் கடுமையாக கையாண்டது. லட்சகணக்கானோர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
ஆகஸ்ட் 9 அன்று மும்பையில் கவலிய டாக் மைதானத்தில், அருணா ஹாஸ் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். பொது ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்தது. வரலாற்று எண்கள் வெள்ளையனே வெளியேறு 1942 ஆகஸ்டு 8 அறிவிக்கப்பட்ட சில நாட்களில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். காந்தி சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்கள் 21, காந்தி சிறையில் இருந்த நாட்கள் 637, நேரு சிறையில் இருந்த நாட்கள் 1030, கஸ்தூரிபாய் சிறையில் இருந்த காலம் 18 மாதங்கள்.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் தாக்கம் 500 தபால் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. 250 ரயில் நிலையங்கள் சேதமடைந்தது, 85 அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்தது, 2500 இடங்களில் கம்பி தடைகள் துண்டிக்கப்பட்டன. மக்கள் போராட்டங்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட ராணுவ படைகள் 57, இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த இயக்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட விட்டாலும், தேசம் முழுக்க மக்கள் தன்னெழுச்சியாக திரண்ட நிகழ்வு பிரிட்டன் ஆட்சிக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இதுவரை காங்கிரசுக்கு வெகுஜன ஆதரவு எதுவும் இல்லை என்ற எண்ணம் உடைந்து, இந்தியாவில் பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனம் அடைந்து வருவதை காட்டிய முதல் இயக்கம் என்ற வகையில் வரலாற்றில் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டிய இயக்கம் இது.