ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளுடிக் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் பக்கத்திலிருந்த ப்ளுடிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் ட்விட்டரை 20.76 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சுரேஷ் சோனி, அருண்குமார், சுரேஷ் ஜோஷி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரின் டுவிட்டரிலும் ப்ளுடிக் வசதி நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ப்ளுடிக் வசதி நீக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் மீண்டும் ப்ளுடிக் வசதி வழங்கப்பட்டது. இதுகுறித்து குறித்து ட்விட்டர் தெரிவித்ததாவது கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு செயல்பாடுகள் இல்லாத காரணத்தினால் ப்ளுடிக் வசதி நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. தற்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் கணக்கில் இருந்தும் புளூடூத் வசதி நீக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் கணக்கு இதுதான் என்பதை குறிக்கும் வகையில் புப்ளுடிக் வசதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.