சூப்பரான கேழ்வரகு கீர் செய்வது எப்படி …
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கப்
பாசிப்பருப்பு மாவு – 3 டீஸ்பூன்
பால் – 2 கப்
சர்க்கரை – தேவைக்கேற்ப
நெய் – தேவைக்கேற்ப
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
முந்திரி – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பாசிப்பருப்புமாவு , தண்ணீர், சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்ததும் பால் , ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து இறக்கினால் சூப்பரான கேழ்வரகு கீர் தயார் !!!