Categories
தேசிய செய்திகள்

இராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை…!!

இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 4 ஆயிரம் ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றனர். இவற்றில் மின்னணு சாதனங்கள் மளிகை பொருட்களுடன்  வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபானங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ள பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை ஒன்று விளையாட்டு பொருட்கள் எதுவும் நேரடியாக கொள்முதல் செய்யப் படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தயாரிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்திற்கு ஆதரவாக முப்படை  உயரதிகாரிகள் ஒப்புதலோடு இந்த நிலைப்பாட்டு எட்டி இருப்பதாக  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |