மகாராணியார் ஹரியின் ராணுவ பட்டங்களை பறித்துக்கொண்ட கோபத்தில் தான் இளவரசர் ஓபரா பேட்டிக்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள அரண்மனையிலிருந்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் வெளியேறியுள்ளார்கள். இதனால் இளவரசர் ஹரியின் ராஜ குடும்பத்தில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இளவரசர் ஹரி ராணுவத்தில் பணிபுரிந்து பலவிதமான பட்டங்களை பெற்றுள்ளார். இதனையடுத்து மகாராணியார் தான் அரண்மனையிலிருந்து வெளியேறிய கோபத்தில் தனது ராணுவ பட்டங்களை பறித்துக் கொள்ள மாட்டார் என்று இளவரசர் ஹரி நம்பியுள்ளார்.
ஆனால் மகாராணியார் இளவரசர் ஹரியினுடைய ராணுவ பட்டங்களை பறித்துள்ளார். இதனையடுத்து மகாராணியாரின் இந்த செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்ற இளவரசர் ஹரி 24 மணி நேரத்திற்குள்ளேயே ஓபரா பேட்டிக்கு சம்மதம் தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.