Categories
இராணுவம்

“ULTIMATE” இந்திய ராணுவத்தின் சிலிர்ப்பூட்டும் 12 சிறப்புகள்…!!!

ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடும் கொடுமையிலும் நமது நாடும் நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் எல்லையில் தங்களது பந்தம் பாசம் குடும்பங்கள் எல்லாம் மறந்து நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான நமது இராணுவ வீரர்கள்தான். தாயுள்ளம் கூட தனது பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் நமது வலிமை வாய்ந்த இந்திய ராணுவ வீரர்கள், நம் தேசம் மட்டுமின்றி பிற நாடுகளில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் உண்டாகி இருந்தால் கூட அங்கும் சென்று தங்களது பணியை செம்மையாக செய்து பல உயிர்களை காப்பாற்றி நற்காரியங்களை செய்துள்ளனர்.

நமக்காக நமது தேசத்திற்காக போராடி வரும் நமது வீரர்கள் சாதனை மற்றும் அவர்களை பற்றிய வியக்க வைக்கும் சில உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வது நமது கடமையாகும்.

1.உலகிலேயே உயரமான போர்க் களம் என்று கருதப்படும் சியசென் கிலேஷியேர் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது, இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர்களுக்கு மேல் ஆகும். கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து போரிட்டது குறிப்பிடத்தக்கது.

2.உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட இராணுவப் படை இந்தியாவுடையது என்பது  பெருமைக்குரிய விஷயமாகும். மலைப்பகுதிகளிலும் உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர்.

3.கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்பு பணியாக கருதப்படும் ஆபரேஷன் ராகட்  வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் இந்திய ராணுவப்படை வீரர்கள்.இந்த ஆபரேஷன் ஆனது உத்ரகாண்டில் நடந்த வெள்ளப்பெருக்கு  காரணமாக நடந்தது.

4.கேரளத்தில் இருக்கும் எளிர்மலா கப்பல் படை தான் இதன் பிரிவில் ஆசியாவிலேயே பெரியதாகும்.

5.உலகிலையே மிகவும் பழமையாக கருதப்படும் குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

6.இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலையே ராணுவ வீரர்களால் மிகவும் உயரத்தில் கட்டப்பட்ட பாலமாகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்

7.கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தது ஒரு போரில் சரணடைந்த வீரர்களில் அதிகப்படியான எண்ணிக்கையாகும்.

8.உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும் சீனாவும் இருக்கின்றன

9.நமது நாட்டில் 13 லட்சத்து 25 ஆயிரம் பட்டாளங்களும் 9 லட்சத்து அறுபதாயிரம் ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.

10.உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி ஏவுகணை ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பிரமோஸ் 2 என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமாக ஹைபர்சோனிக் ஏவுகணை ஆகும்.

11.இந்திய ராணுவப்படை கடந்த 1771ம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால்  கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. உலக அமைதிக்காக ஐநாவிற்க்கு  பங்களிப்பு தரும் ராணுவங்களில் இந்திய ராணுவம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.

12.போரில் காட்டில் மறைந்து இருந்து மரங்களில் இருந்து தாவி போரிடும் முறையான கொரில்லா போர் முறையில் நம் நாட்டவர்கள் சிறந்த செயல்படக்கூடியவர்கள்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |