கின்னஸ் சாதனை படைப்பதற்காக வயதான ஒருவர் புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 74 வயதான ஜான் எவான்ஸ் என்பவர் அதிக எடையுள்ள பொருட்களை எல்லாம் தூக்கி 98 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் அவர் கிறிஸ்துமஸ் வேடமணிந்து 99வது சாதனையாக ஒரு ராட்சத சிமினியை தலையில் தூக்கி முயற்சி செய்துள்ளார். குறிப்பாக அவரின் 75வது பிறந்தநாளானது அடுத்த ஆண்டு மார்சில் வரவுள்ளது. அதற்குள் நூறு கின்னஸ் சாதனைகளை படைத்து விடவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்.
அதிலும் அவருக்கு நீரிழிவு, ஆஸ்துமா, ஒரு கண் பார்வையிழப்பு, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குறைபாட்டினால் உண்டாகும் Angina போன்ற பல்வேறு நோய்கள் உள்ளன. இருப்பினும் அவர் தனது முயற்சியை கைவிடாமல் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதில் “வயதும் நோயும் ஒருபோதும் சாதனைக்கு தடையில்லை’ என்று கூறியுள்ளார்.