Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய சூறைக்காற்றினால்… முறிந்து விழுந்த ராட்சத மரம்… சிரமப்படும் பொதுமக்கள்….!!

பலமாக வீசிய சூறைக்காற்றால் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் பெண்ணின் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பல்வேறு பகுதிகளில் உள்ள மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுவதால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பலமாக வீசிய சூறைக்காற்றால் காளியோடு ஆதிவாசி காலனியில் வசிக்கும் ஸ்ரீஜா என்பவரது வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்து விட்டது. இதனால் ஸ்ரீஜாவின் வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராட்சத மரம் விழுந்ததால் சேதமான வீட்டை பார்வையிட்டுள்ளனர்.

Categories

Tech |