Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ராட்சத அலையால்… மீனவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

ராட்சத அலையில் சிக்கி மீட்கப்பட்ட 2 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் சக்திகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திகுமார் தனக்கு சொந்தமான படகில் பாஞ்சாலன், முருகேசன், நாகூர் பிச்சை, நந்தகுமார் ஆகியோருடன் மீன்பிடிப்பதற்காக கோடியக்கரை கடல் பகுதியை நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து மீன் பிடித்து விட்டு கரையை நோக்கி  திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட  ராட்சத அலையால் இவர்களின் படகு தண்ணீரில் கவிழ்ந்துவிட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி ஐவரும் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் முருகேசன், சக்திகுமார், நந்தகுமார் ஆகிய மூவர் மட்டும் கவிழ்ந்த படகில் மீண்டும் ஏறிவிட்டனர்.

ஆனால் நாகூர் பிச்சை மற்றும் பாஞ்சாலன் ஆகிய இரண்டு மீனவர்களை ராட்சத அலை உள்ளிழுத்துச் சென்றதால் படகிலிருந்த மூன்று மீனவர்களும் அதிர்ச்சியடைந்து ஊருக்குள் சென்று கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்கி அலையில் சிக்கிய இருவரையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் மீனவர்கள் அலையில் சிக்கிய இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டு அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது பாஞ்சாலன் மற்றும் நாகூர் பிச்சை இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |