Categories
சினிமா தமிழ் சினிமா

சித்தி -2க்கு வந்த சோதனை….. வேதனையில் ராதிகா….. !!

தமிழ்திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை வைத்துள்ளனர் நடிகை ராதிகா. நடிகர் சரத்குமாரின் மனைவியான இவருக்கு இன்றுவரை மார்க்கெட்டை  திரைத்துறை மார்க்கெட் இருந்து வருகின்றது. அதற்க்கு காரணம் தமிழகத்தில் தற்போது வெளியாகும் சீரியலில் ராதிகா தொடர்ந்து நடித்து வருவதுதான். இந்த காலகட்டத்தில் சினிமாவில் நடித்து பெயர் பெற்றதைவிட இவருக்கு நாடகங்களில் நடித்ததன் மூலமாக பெயர் பெற்று தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் சென்று புகழ் உச்சிக்கு சென்றுள்ளார்.

இவர் நடித்த சீரியல்களால்  டிஆர்பி ரேட் அதிகமாக நம்பர் ஒன் இடம் பெற்று பணத்தை வாரி வழங்குகிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக இவர் சமீபத்தில் நடித்த ஒரு சீரியல் டிஆர்பி ரேட் இல்லாததால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தான் அவர் வேறு சேனலுக்கு சென்று கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததையடுத்து மீண்டும் சீரியல் பக்கம் களமிறங்கியுள்ள ராதிகா சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். முதலில் டிஆர்பி ரேட் ரேட்டில் டாப் 5இல் இருந்த தொடர் தற்போது டாப் 5யை விட்டு வெளியேறிவிட்டது. செம்பருத்தி சீரியல் முதலிடம் பெற்றுள்ளதால் ராதிகா ஆதரவு ரசிகர்கள் பட்டாளம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |