Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராதிகா சரத்குமார்…. வெளியிட்ட ட்விட்டர் பதிவு…!!!

நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

ஆனால் நடிகை ராதிகா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலிகள் மட்டுமே இருக்கிறது.

எனது உடல் நலம் மற்றும் வழக்குகள் குறித்து மீடியாக்கள் கண்டதையும் எழுதி வருகிறது. நீதிமன்றங்களில் நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம். மேலும் நான் வேலைக்கு திரும்பிவிட்டேன். இனிய நாள் என்று பதிவு செத்துள்ளார்.

Categories

Tech |