விண்வெளியில் சுழலக்கூடிய பொருள் ஒன்றிலிருந்து 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை ரேடியோ சிக்னல் வெளியேறுவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
கடந்த 2018 ஆம் வருடத்தில் விண்வெளியில் சுழலக்கூடிய ஒரு பொருள் கண்டறியப்பட்டது. இந்த பொருளில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மூன்று தடவை கதிர்வீச்சு வெளிப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறினர். அந்த சமயங்களில், அந்த பொருளிலிருந்து வெளியேறக்கூடிய ரேடியோ சிக்னல் தெளிவாக உள்ளது என்றும் கூறினார்கள்.
இந்நிலையில், தற்போது 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை அதிலிருந்து, ரேடியோ சிக்னல் வெளியேறுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த ரேடியோ சிக்னல், எரிந்த நட்சத்திரங்களிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலியாவின் கார்டின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.