சுவையான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி சட்னி..
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி – 1/4 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – தேவையான அளவு
பூண்டு – 4 பல்
கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
புளி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய முள்ளங்கி , பூண்டு , தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு உப்பு , புளி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து , அரைத்த கலவையை கொட்டிக் கிளறி இறக்கினால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்!!!