இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது என்று பிரான்ஸின் தூதரான இம்மானுவேல் லென்னேய்ன் கூறியிருக்கிறார்.
இந்தியா, பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தோடு கடந்த 2016ஆம் வருடத்தில் ரபேல் ஜெட் என்ற நவீன போர் விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில், வரும் 2022-ஆம் வருடத்திற்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில், இந்தியாவிற்கு 36 விமானங்களை அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
பிரான்ஸ் நிறுவனம், 30 விமானங்களை தற்போதுவரை கொடுத்திருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் மீதி 36 விமானங்களை கொடுத்துவிடுவோம் என்று இந்தியாவிற்கான பிரான்ஸின் தூதர் இம்மானுவேல் லென்னேய்ன் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சரியான நேரத்தில் ரபேல் விமானங்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவிய சமயத்திலும், தகுந்த நேரத்தில் விமானங்கள் கொடுக்கப்பட்டது. எங்கள் நாட்டின் குழுக்கள், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்கு இரவு பகல் பாராது உழைத்திருக்கிறார்கள். இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுகிறது.
நாங்கள் இந்தியாவிற்கு ,பக்கத்து நாடு போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிற்கு, ஐநா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமான இடம் கிடைப்பதற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.