Categories
தேசிய செய்திகள்

ரபேல் விமானங்கள் வாங்க உதவிய தமிழர்… மரியாதை செய்ய உள்ள பிரதமர்…!!!

இந்தியாவிற்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு உதவியாக இருந்த முன்னாள் விமானப் படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த மார்ஷல் கிருஷ்ணசாமி என்பவர் முன்னாள் விமானப்படை தலைவராக இருந்தவர். விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியுள்ளார். அப்போது இந்தியாவிற்கு இது மிகவும் அவசியமான போர் விமானம். இந்த விமானங்கள் இந்திய விமானப் படைக்கு வரவேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளார். இந்தியா ரபேல் விமானங்களை வாங்குவதற்கு முயற்சி செய்தபோது, இவர் முழு மூச்சாக ஆதரவு அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், மோடியை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல், கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரசாரமாக மாறினார்.

அச்சமயத்தில் ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படைக்கு அவசியம் தேவை என்று உறுதியாக கிருஷ்ணசாமி கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் இந்தியா வந்துள்ள ஐந்து ரபேல் விமானங்கள் விரைவில் விமான படையில் சேர்க்கப்பட இருக்கின்றன. இதனை ஒரு விழாவாக கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அந்த விழாவில் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு முழு ஆதரவு அளித்த, ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமியை அழைத்து மரியாதை செய்வதற்கு பிரதமர் முடிவு செய்துள்ளார். அதற்காக நீங்கள் அவசியம் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கிருஷ்ணசாமியை அலைபேசி வாயிலாக மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விழா இம்மாதத்தின் இறுதியில் ஹரியானாவின் அம்பாலா நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |