Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த படத்தை பொல்லாதவன், ஜிகர்தண்டா ,ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் .

ருத்ரன் படக்குழு

மேலும் இந்த இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசனே இயக்குகிறார் . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . இந்த பூஜையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ,நடிகை பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் , இயக்குனர் கதிரேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .

Categories

Tech |