தமிழ் திரையுலகில் நடிகராகவும்,இயக்குனராகவும் மற்றும் நடன இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இதில் நடன இயக்குனராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘அற்புதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘முனி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்தார். முனி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா ,காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கி நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ‘துர்கா’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் மெட்ராஸ், கபாலி மற்றும் கேஜிஎப் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணிபுரிந்த இரட்டையர்கள் அன்பு அறிவு ஆகியோர் இப்படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் மூலம் அன்பு அறிவு இயக்குனர்களாக அறிமுகமாக உள்ளனர். இதனை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
I’m so happy and proud to introduce our Renowned stunt masters @anbariv as directors of #Durga movie under #RagavendraProduction !
It’s going to be a power-packed film 🔥
Need all your blessings 🙏🏼#DirectorsOfDurga #Anbariv pic.twitter.com/gDSqp7K5gs— Raghava Lawrence (@offl_Lawrence) January 5, 2022