கொரோனா நிவாரண நிதி உதவியாக ராகவா லாரன்ஸ் நடிகர்களிடம் உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ்அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் கொரோனா வைரஸின் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்தேன். அதன் பிறகு பெரும்பாலான மக்களும், பிற சங்கங்களை சேர்ந்தவர்களும் என்னிடம் உதவி கேட்க அணுகினர். ஆகவே வினியோகஸ்தர் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளேன். மக்களுக்கு சேவை செய்வது என்னுடைய கடமையாக கருதுகிறேன்.
இது போலவே நடிகர் கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் ஆகிய அனைத்து நடிகர்களிடமும் உதவி கேட்டுள்ளேன். அது மட்டுமின்றி உதவி செய்ய தயாராக இருக்கும் அரசியல்வாதிகளிடமும் வேண்டுகோள் வைக்கிறேன். நான் உங்களிடம் பணமாக கேட்கவில்லை, உணவு பொருட்களாக தாருங்கள் நேரில் வந்து வாங்கி கொள்கிறோம். இவையெல்லாம் நான் தொடங்கிய தாய் அமைப்பு மூலம் இந்த உதவிகள் செய்யப்படும்.