காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கட்சியின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சேராத அரசியல் அனுபவம் கொண்ட மற்றும் தலைமை பண்பு கொண்ட ஒருவரை தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் தேடுவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.