Categories
அரசியல்

இது பூஜ்ஜிய பட்ஜெட்… எளிய மக்களுக்கு ஒன்னும் இல்ல…. மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி கடும் தாக்கு…!!!

பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இருவரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். அதில் 5G வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு ஒரே பத்திரபதிவு, நெடுஞ்சாலை திட்டம், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, நதிகள் இணைப்பு, 400 வந்தே பாரத் ரயில், இ-பாஸ்போர்ட் போன்ற அம்சங்கள் இருக்கிறது.

எனினும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் எளிய மக்களுக்கு ஒன்றும் கிடையாது என்று தெரிவித்து, “பணவீக்கம் மற்றும் வேலையின்மையால் நசுக்கப்படும் நிலையில் சாதாரண பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்ஜியம் தான் இருக்கிறது. இது பெகாஸஸ் ஸ்பின் பட்ஜெட் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேலும் காங்கிரஸ் எம்.பியான ராகுல்காந்தி, “இது மோடி அரசாங்கத்தின் பூஜ்ஜிய பட்ஜெட், ஊதியம் பெரும் பிரிவினர், நடுத்தர வர்க்கம், ஏழை மக்கள், இளைஞர்கள், விவசாயிகள் சிறு குறு தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்தவித சலுகையும் இடம்பெறவில்லை ” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |