ராகுல் காந்தி, முன்பு இந்தியாவை பிரதமர் ஆண்டார், ஆனால் தற்போது ராஜா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று மோடியை விமர்சித்திருக்கிறார்.
உத்தரகாண்டில் தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது, கொரோனோ பரவிய காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பல மாதங்களாக விவசாயிகளை சாலைகளில் காத்திருக்க வைத்தார். காங்கிரஸ் என்றைக்கும் இதுபோல் செயல்படாது. ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் கதவுகளை அடைத்ததில்லை.
அதே நேரத்தில் அவர்களை ஒத்துழைத்து செயல்பட தான் காங்கிரஸ் விரும்புகிறது. அனைவருக்கும், பணியாற்றாதவர் பிரதமராக இருக்க முடியாது. அதன்படி நரேந்திர மோடி பிரதமர் கிடையாது. இந்தியாவில் தற்போது பிரதமர் இல்லை. தான் தீர்மானிக்கும் போது அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று நம்பக்கூடிய ராஜா தான் தற்போது இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.