காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு பலியான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தாக்கப்பட்டதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதையொட்டி புதுச்சேரியில் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இப்போராட்டத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாக நாராயணசாமி குறிப்பிட்டார். இதற்கு பொறுப்பேற்ற அந்த மாநில முதலமைச்சர் ஆதித்யாநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.