Categories
அரசியல்

“அப்பறம், பிரதமரே!”….. சீனா ஆக்கிரமித்த நிலம் எப்போ கிடைக்கும்….? ராகுல் காந்தி கேள்வி…!!!

சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பில் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிடோ என்னும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவனான மிரம் தரோன், சீன நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் இருக்கும் துதிங் என்னும் பகுதியில் வேட்டையாட சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி, சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்க வலியுறுத்தினார்.

மேலும், இந்திய ராணுவம், சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தது. சீன ராணுவம், முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில், அதன் பின்பு இந்திய ராணுவத்திடம் சிறுவனை ஒப்படைத்து விட்டது. இது தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, சீன அரசு, மிரம் தரோனை  இந்தியாவிற்கு திரும்ப அனுப்பியது, ஆறுதல் தருகிறது. சீனா, ஆக்கிரமித்திருக்கும் நிலத்தை இந்தியா எப்போது கைப்பற்றும்? பிரதமரே!” என்று கேட்டிருக்கிறார்.

Categories

Tech |