Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ராகுலை தட்டி தூக்க காத்திருக்கும் லக்னோ ” …..! ‘அதுவும் இத்தனை கோடிக்கா’…? விவரம் இதோ …..!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலை ரூபாய்  20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்15-வது ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. அதன்படி அகமதாபாத் ,லக்னோ ஆகிய    2 புதிய அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே ஒவ்வொரு அணியும்  தங்கள் அணியில் உள்ள 4 வீரர்களை மட்டும் தக்கவைத்து மீதமுள்ள வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் விடுவிக்க வேண்டும். இதனால் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன .இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல் அடுத்த சீசனில் பஞ்சாப் அணியில் விளையாட விரும்பவில்லை என தெரிகின்றது.

இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு சென்றால் ரூபாய் 20 கோடி வரை செல்வார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தார் .இந்த நிலையில் அடுத்த சீசனில் புதிய அணியான லக்னோ கே.எல்.ராகுலை ரூபாய் 20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .ஒருவேளை கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் லக்னோ அணி ரூபாய் 20 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கும் என தெரிகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூபாய் 11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கே.எல். ராகுல் கடந்த 4 வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி 600 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |