Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில்… சாதி வன்முறை… பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… ராகுல் மற்றும் பிரியங்கா கண்டனம்…!!

உத்தரபிரதேசத்தில் ஜாதி வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சத்யமேவ் என்பவர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்
உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் காட்டாட்சியில், சாதி வன்முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பட்டியல் இன பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டது, அதற்கு ஒரு உதாரணம்” இவ்வாறு அவர் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா இதுகுறித்து கூறுகையில், ‘‘யோகி ஆதித்யநாத் அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்பதை அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. குற்றவாளிகளுக்கு சட்டம் பற்றிய பயமே இல்லை. ஆகவே, மாநில அரசு சட்டம்-ஒழுங்கை ஆய்வு செய்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |