தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை தீவிரமாக தொடங்கியுள்ளனர். அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்குரிய வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி ஏற்கனவே தமிழகம் வந்து தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டார். இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் ஒரு நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்.
காலை 11 மணிக்கு புதுச்சேரி வரும் ராகுல் காந்தி முத்தியால் பேட்டை சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். இதையடுத்து மாலை 3 மணிக்கு ஏஎப்டி மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.