இந்நிலையில் பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து, இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் இன்று காலை தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது நான் பிரதமர் மோடியிடம் ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்தாரா இல்லையா என்பது பற்றி நாட்டின் எப்பகுதிக்கும் சென்று அவருடன் வாக்குவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
ஒரு வேளை இதில் நான் தோற்று விட்டேன் என்றால் நான் அரசியலை விட்டு விலகவும் தயார். கடந்த 2014ம் ஆண்டு மோடி கங்கையின் புதல்வனாக வந்தார். இப்போது ரஃபேல் ஏஜென்டாக வெளியேற போகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகச்சிறந்தவர் மற்றும் உயர்வானவர். ராகுல் காந்தி பீரங்கி, நான் ஏகே 47. என்று அவர் கூறினார்.