தோல்வியடைந்தவர் ராகுல் தோல்வியடைய போறவர் ராகுல் என்று தமிழிசை சௌந்த ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்தை நாகர்கோவிலில் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார் . மேலும் இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ராகுல் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .
அப்போது அவர் கூறுகையில் , 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தவில்லை . 16 வரிகள் ஒன்றாக இணைத்து கொடுக்கப் பட்டது தான் GST . இது புதிய வரி கிடையாது . தமிழகத்திற்கு GST_யால் 1 லட்சம் கோடி இலாபம் கிடைத்துள்ளது .பிரதமர் நேர்மறையாக இருப்பதை ராகுல்காந்தி எதிர்மறையாக சித்தரித்து வருகின்றார் . கல்லூரி மாணவிகள் முன்பு பிரதமரை விமர்சித்து பேசியது தவறு , தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்த பிறகு பேசக்கூடாது என்று தமிழிசை தெரிவித்தார் .
மேலும் பேசிய அவர் , மாணவிகள் மத்தியில் பிரதமரை தவறாக சித்தரித்து பேசியது தவறு . கல்லூரியை அரசியல் காலமாக மாற்றுவதை நான் விருப்பவில்லை . வேலைவாய்ப்பை கொடுக்க ஏன் இவளோ சிரமமாக இருக்கின்றது , தண்ணீர் பிரச்சனை தீர வில்லை, நிலப்பிரசனை தீரவில்லை என்று பேசிய தமிழிசை 1971_ஆம் ஆண்டி ராகுலின் பாட்டி வறுமையே வெளியேறு அது தான் எங்கள் தாரக மந்திரம் என்றார் வறுமை ஒழிந்ததா ? என்று கேள்வி எழுப்பிய அவர் தோல்வி அடைந்தவர் ராகுல் , தோல்வியடைய போகிறவர் ராகுல் என்று விமர்சனம் செய்யதார் .