Categories
கிரிக்கெட் விளையாட்டு

அனைவரும் வாக்களிக்க பிரச்சாரம்….. இந்திய தடுப்பு சுவர் டிராவிட் பெயர் நீக்கம்…!!

அனைவரும் வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்து வரும்  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தடுப்பு சுவர்  என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்  இப்போது இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். ராகுல் டிராவிட் பெங்களுரில் வசித்து வருகிறார். டிராவிட்டை  கர்நாடக மாநிலத்தேர்தல் ஆணையம் தூதராக நியமித்துள்ளது. இதையடுத்து ட்ராவிட் அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள் என  விளம்பரங்களில் கூறி வருகிறார். வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வெற்றி பெற செய்யுங்கள்’ என்றும் ட்ராவிட்  கூறி வருகிறார்.

Image result for BENGALURU: Former Indian cricket captain Rahul Dravid, who is Karnataka election commission's icon and ambassador, will not be casting his vote on April 18

ட்ராவிட் நன்றாக போஸ்டர்களில் பளிச்சென்று சிரித்தபடியே  வாக்களியுங்கள் என்ற  வாசகத்தைச் சொல்கிறார். அனைவரையும்  வாக்களிக்கச் சொல்லும் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்களர் பட்டியலில் இடம் பெறவில்லை. அதனால் டிராவிட்டால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடி யாது என்பதுதான் உண்மை. ராகுல் டிராவிட்டின் வீடு பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள இந்திரா நகரில் இருக்கின்றது . ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல் டிராவிட் வாக்களித்துவிடுவார்.. இதனால்தான் அவரை தேர்தல் ஆணையம் தூதராக நியமித்தது. ஆனால், தூதரான டிராவிட்டால் வாக்களிக்க முடியாது என்பதை அறிந்து  மாநில தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related image

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’ராகுல் டிராவிட், அவரது  மனைவியுடன் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டுக்கு குடியேறிவிட்டார். இதனால் அவர் குடும்பத்தினருக்கான வீட்டு முகவரியிலிருந்து அவர் பெயரை நீக்க்கும்படி, ராகுல் டிராவிட்டின் தம்பியான  விஜய், தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பம் 6 ஐ சமர்ப்பித்துள்ளார். அதன்படியே  ராகுல் டிராவிட் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், ராகுல் டிராவிட் , புதிய முகவரியில் தனது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பம் 7 ஐ சமர்ப்பிக்க தவறியதால்  வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை’’ என்றார். ஆனால், ராகுல் டிராவிட்டின் தம்பி விஜய் இதனை மறுத்துள்ளார். ‘’டிராவிட் சார்பாக ஃபார்ம் 7 , உதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பின்பு  என்ன நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |