Categories
தேசிய செய்திகள்

மீனவர்களோடு நடுக்கடலில்…. நீச்சலடித்து மகிழ்ந்த ராகுல்…. வெளியான புகைப்படம்…!!

மீனவர்களோடு ராகுல்காந்தி கடலில் வலை வீசியதோடு நீச்சல் நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ராகுல்காந்தி இரண்டு நாட்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து மீனவர்களை சந்தித்து பேசிய அவர், விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகிறார்களோ அதேபோலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது இவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மீனவர்களுடன் கொல்லத்தில் ஒன்றாக படகில் வலை வீசி மீன்பிடித்ததோடு, அவர்களோடு சேர்ந்து கடலில் நீச்சல் அடித்து மகிழ்ந்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து மீனவர்கள் ராகுல் காந்தி எங்களோடு எளிமையாக பழகினார் என்று தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |