Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம்” ராகுல்காந்தி கண்டனம் …!!

ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Image result for rahul gandhi and chidambaram

இதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு எதிரான கைது நடவடிக்கைகளை  மேற்கொள்ள மேலும் தீவிரமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது ட்வீட்_டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டதில் , இந்த விஷயத்தில் கண்டனம் தெரிவித்த அவர் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் என்று ராகுல்காந்தி சாடி இருக்கிறார் மீதான மத்திய அரசு நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது  என்றும் ,சிபிஐ , அமலாக்கத் துறை மூலம் சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசாங்கம் முயற்சிப்பதாக ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்

 

Categories

Tech |