Categories
தேசிய செய்திகள்

வயநாட்டில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்…….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி‌ கேரள மாநிலம் வயநாடு மக்‌களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்‌ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.மேலும் அவர் கேரளாவின் வ‌யநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். இதையடுத்து ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

ராகுல் காந்தி வயநாடு காங்கிரஸ் கொடி க்கான பட முடிவு

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்‌கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர். இன்று காலை 11.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் வேட்பு மனுத்தாக்கலில்  கேரள காங்கிஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா பங்கேற்கிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தி போட்டியிட உள்ள கேரள வயநாடு மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் வேட்பாளர் துஷார் வெல்லப்பள்ளி ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சரிதா நாயர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |