ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி அங்குள்ள மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வைரலாகி வருகிறது.
ஹரியானாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராகுல் காந்தி இன்று மகேந்திரகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின் டெல்லி திரும்பியபோது, மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் கல்லூரி ஒன்றில் தரையிறக்கப்பட்டது. அப்போது கல்லூரியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். ராகுல் காந்தி விளையாடும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
@RahulGandhi plays cricket in Rewari Haryana.#SaturdayMotivation pic.twitter.com/oau8cf9sWI
— 𝐌𝐚𝐧𝐨𝐣 𝐕𝐚𝐝𝐚𝐤𝐚𝐝𝐮 (@manojpdkt) October 19, 2019