Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறந்தநாள் ஸ்பெஷல்” காதலனை அறிமுகப்படுத்திய ராகுல் ப்ரீத் சிங்…. வெளியான புகைப்படம்….!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை சமூக வலைதளபக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”தடையறத் தாக்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத்சிங். இதனையடுத்து, இவர் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பாலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்த நாளான இன்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர் நடிகர் மற்றும்  தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவில், இந்த ஆண்டு நீங்கள் எனக்கு மிகப்பெரிய பரிசு! என் வாழ்க்கையில் வண்ணம் சேர்த்ததற்கு நன்றி, என்னை இடைவிடாமல் சிரிக்க வைத்ததற்கு நன்றி, நீ நீயாக இருப்பதற்கு நன்றி என்று குறிப்பிட்டு தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CU1x-zyq5L0/

 

Categories

Tech |