ராஜினாமாவை செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல் காந்தி நீக்கியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படு தோல்விக்கு பொறுபேற்ற அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் கொடுத்தார்.ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை ராகுலே கட்சியின் தலைவராக தொடர வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ராஜினாமா செய்வதற்கான காரணங்களை தெரிவித்து 4 பக்க அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டார். அதில் , மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எதிர்கால காங்கிரஸ் கட்சிக்கு எனது ராஜினாமாவை மிக முக்கியமானதாக பார்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல் காந்தி நீக்கியுள்ளார்.