Categories
மாநில செய்திகள்

“என்ன ஒரு எளிமை” சம்மணம் போட்டு உட்கார்ந்து…. பிரியாணியை ருசித்த ராகுல்…. வைரலாகும் வீடியோ…!!

ராகுல் காந்தி சமையல் கலைஞர்களோடு அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரு கை பார்க்கலாம் என்ற முழக்கத்தோடு ராகுல் காந்தி கடந்த வாரம்  கோவை மாவட்டம் வந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சில சமையல் கலைஞர்கள் இணைந்து சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அசைவ உணவுப் பொருட்களை அதிகளவில் சமைக்கும் அந்த குழுவினர் அதை சமைத்து அருகிலுள்ள குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அந்த கிராமத்திற்கு சென்று சமையல் கலைஞர்களை சந்தித்துள்ளார்.

மேலும் அவர்கள் ராகுல் காந்திக்காக காளான் பிரியாணியை தயாரித்துள்ளனர். அப்போது ராகுல் காந்தி அவர்களோடு சேர்ந்து தயிர் பச்சடியை தயார் செய்துள்ளார். இதனையடுத்து ஓலைப்பாயில் அவர்களுடன் சகஜமாக அமர்ந்து ராகுல்காந்தி காளான் பிரியாணியை ருசித்து  சாப்பிட்டுள்ளார். அப்போது பிரியாணி சுவையாக இருப்பதாகவும் அடுத்த முறை வரும்போது இதே போன்று செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |