காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை புதுச்சேரி வர இருக்கும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.
முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் தற்போது முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் ஏற்கனவே பாஜகவில் சேர்த்துவிட்டனர்.
தற்போது ராஜினாமா செய்துள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜான்குமாரும் பாஜக பக்கம் தாவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.