Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீனாவிடம் சரணடைந்த மோடி – ராகுல் காந்தி விமர்சனம் …!!

சீனாவுடனான எல்லை மோதலில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் இரண்டு நாடுகளும் அவர்களது படை வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்தனர். இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். அவர்களிடையே நடந்த ஏழு மணி நேரம் முதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்து சீன ராணுவத்தினர் 35 பேர் மரணமடைந்தனர்.

இது இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலையில் பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை விமர்சித்து அவர் சீனாவிடம் சரணடைந்ததாக சாடி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜப்பான் நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்றை மேற்கோளிட்டு “நரேந்திர மோடி உண்மையாகாவே சரண்டர் மோடி தான்” என பதிவிட்டுள்ளார்.  இதனிடையே போதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றபோது இந்திய எல்லைக்குள் அந்நியப் படை வீரர்கள் ஊடுருவவில்லை என பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |