டெல்லியில் உள்ள தியேட்டரில் ராகுல் காந்தி படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 3_ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , நான் காங்கிரஸின் தலைவர் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.இது காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் இதற்கான 4 பக்க அறிக்கையையும் அவர் வெளியிட்டார். அதில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றப்பதாகவும் , இன்னும் பலரை தோல்விக்கு பொறுப்பாக வேண்டியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை ராகுல் தான் தலைவராக தொடர்வார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ராகுல் காந்தி பொதுமக்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.அதில் ராகுல் தந்து கையில் வைத்துள்ள பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு சகஜமாக திரைப்படம் பார்க்கின்றார்.