ராகுல் நடைபயணம் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், தேசப்பற்று மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள். கொள்கை பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் உடைய அபிமான தலைவர் மரியாதைக்குரிய திரு ராகுல் காந்தி அவர்கள் அவரின் தன்னுடைய தந்தையின் உடைய ஆசியைப் பெற்று, காந்தி மண்டபத்திலேயே மகாத்மா காந்தியின் உடைய ஆசியை பெற்று, காமராஜ் மண்டபத்திலே பெருந்தலைவர் காமராஜர் ஆசியை பெற்று இந்த பாரதத்தை இணைக்கும் நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.
பாரதத்தை இணைக்கும் நடைபயணம் என்று சொல்லக்கூடிய இந்த நடைப்பயணத்தை கேலி செய்பவர்கள், கொச்சை செய்பவர்கள், இந்த நாட்டிலே இருக்கிறார்கள் என்பதற்காக வருந்துவதோடு, அவர்களை மன்னிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியையும், பெருந்தலைவர் காமராஜரையும் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
1942 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் ”கீச் இந்தியா” என்ற கோஷத்தை நாடு முழுவதும் வைத்தார். தமிழிலே அதனை ”வெள்ளையனே வெளியேறு” என்று சொன்னோம். ஹிந்தியில் அதை ”பாரத் ஜோடோ” என்று சொன்னார்கள். பாரதத்தை விட்டு நீ வெளியேறு என்று வெள்ளையனை பார்த்து சொன்னார்கள் என தெரிவித்தார்.