Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாகிஸ்தானுக்கு உதவிய ராகுல்” மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்…. மத்திய அமைச்சர் ஆவேசம்..!!

ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார்.

ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் கொடூரமான அரசு நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சியும், இந்திய ஊடகங்களும் சிக்கியுள்ளது. அரசின் அடக்குமுறையால் மக்கள் ஒடுக்கப்பட்டு காஷ்மீர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் காஷ்மீர் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை, இதில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்று பதிவிட்டார்.

காஷ்மீர் விவரகத்தில் முதலில் ஒரு நிலைப்பாடும் , தற்போது ஒரு நிலைப்பாடும் எடுத்த ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் பலரும் வறுத்து எடுக்கின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது , ராகுலின் செயல் நாட்டை அவமானப்படுத்துவதாக இருக்கின்றது. காஷ்மீரில் வன்முறை நடக்கிறது , மக்கள் உயிரிழக்கிறார்கள் என்று கூறி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார். இதனால் ராகுலும் , காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இது மிகமோசமான பொறுப்பற்ற அரசியல் தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் அப்படி நடக்கின்றது என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |